Showing posts with label தேவேந்திரன். Show all posts
Showing posts with label தேவேந்திரன். Show all posts

#246 கண்ணுக்குள் நூறு நிலவா - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ.குழு: பாபப பாபப..
: தாதத தாதத..
பெ.குழு: நீநிநி நீநிநி..
: ஸாஸஸ ஸாஸஸ..
பெ.குழு: நிரிகரி நிதபம கமபம கரிஸநி
: தப நித ஸாநி ரிஸ ரிகமப
பெ.குழு: தப நித ஸாநி ரிஸ நிதபம பா..
...
: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: அம்பா சாம்பவி சந்த்ரமௌலி ரபலா அபர்ணா உமா பார்வதி
காளி ஹைமவதி ஷிவாத்ரிநயனா காத்யாயனி பைரவி
சாவித்ரி நவயௌவனா சுபஹரி சாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா
...

: தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றஞ்சொல்லுமா
பெ: கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ்சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா
: வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
பெ: சாஸ்திரம் தாண்டித் தப்பிச் செல்வதேது

: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
 கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

பெ.குழு: பூவே.. பெண் பூவே
இதிலென்ன அதிசயம்
இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம்
இவன் மனம் புரியலையா
...
பெ: ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்
: உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பமெல்லாமே இருவருக்கும்
பெ: என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது
: ரெண்டா.. ஏது.. ஒன்றுபட்டபோது

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை.. தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
: ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா

பெ: கண்ணுக்குள் நூறு நிலவா.. இது ஒரு கனவா
: கைக்குட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
...

#245 மந்திரம் சொன்னேன் வந்துவிடு - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி





: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே.. அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல ஆற்றங்கரைக்கு வந்தேனே
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: கண்மணி உனக்கொண்ணு தெரியுமா
அந்த இடுப்பில் இருக்குது என் மனசு
பெ: என் மனம் உனக்கென்ன புரியுமா
தண்ணிக் குடத்தில் துடிக்குது என்னுயிரு
: நீ குளித்தால் நதியில் மணமிருக்கும்
பெ: நீ ரசித்தால் கவியின் குணமிருக்கும்
: வந்துவிட்டேன்.. மெல்ல மெல்ல
பெ: தந்துவிட்டேன்.. என்ன சொல்ல
: பாவமல்ல.. வேதங்கள் தடையல்ல

: மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு
...

: பொருத்தம் நமக்குள் இல்லையென்று
நீ நினைத்ததுண்டோ நெஞ்சுக்குள்ள
பெ: தாமிரபரணி ஆத்துத் தண்ணி
அது ஜாதி பேதம் பார்ப்பதில்ல
: நீ நினைத்தால் திருநீரணிந்திருப்பேன்
பெ: நீ தடுத்தால் கோயில் மறந்திருப்பேன்
: தொட்டதெல்லாம் வெற்றியடி
பெ: வெற்றி தந்தாள் அல்லிக் கொடி
: கட்டிப் பிடி..
பெ: காதல் வேதம் கற்பிக்க வா
காதில் வந்து ஒப்பிக்க வா
காதல் என்னை அழைக்குது
எங்கள் வேதம் என்னைத் தடுக்குது
காதல் பெரிதா.. வேதம் பெரிதா
...
&பெ: காதல்தானே ஜெயிக்குது

: மந்திரம் சொன்னேன் வந்துவிட்டாள்.. சம்மதம் எங்கே தந்துவிட்டாள்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
காலம் நேரம் பாராமல்.. பிறர் கண்கள் ஏதும் காணாமல்
&பெ: ஆற்று மணலில் பேர்கள் எழுதி அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
அழகு பார்ப்போம்.. அன்பே வா
...

#244 புத்தம் புது ஓலை வரும் - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா



புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

என்னென்ன தடை வந்தபோதும் காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற வெள்ளம் வானத்தை மறைப்பதில்லை
காலமின்னும் கூடவில்லை.. மாலையின்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்
உலகம் அழிகின்றபோதும் உன்னை நினைத்திருப்பேன்
தேவனே காத்திருப்பேன்.. தீயிலே பூத்திருப்பேன்
ஜென்மங்கள் தொடர்ந்திருப்பேன்.. இப்போது

புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
நந்தவனங்கள் பூமாலை கட்டும்
நாதஸ்வரங்கள் பொன் மேளங்கொட்டும்
நட்சத்திரம் அட்சதைகள் போடும்.. பண் பாடும்.. என் நேரம் கூடும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
புத்தம் புது ஓலை வரும்.. இந்தப் பூவுக்கொரு மாலை வரும்
...

#243 சந்திக்கத் துடித்தேன் பொன்மானே - வேதம் புதிது

படம்: வேதம் புதிது
இசை: தேவேந்திரன்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி



பெ.குழு: ம்ஹும்.. ம்ஹும்ஹும்ஹும்..
ம்ஹும்ஹும் ம்ஹும்.. ம்ம்ம் ம்ஹும்..
...
பெ: ஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா

ஆ: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆ. ஆ.. ஆஆ.. ஆஆஆஆ..
தனன தீம்த திரனா.. தன திரன.. தனன தீம்த திரனா.. தன திரன..
தனன தீம்த திரனா.. தன திரனா.. தா.. ஆஆஆ ஆ..
...

பெ: முன் வைத்த காலைப் பின் வைப்பதென்ன
நடுக்கம் பிறக்கின்றதா
: இலைகள் அசையும் ஒலியில் கூட இதயம் துடிக்கின்றதா
பெ: அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
அச்சத்தில் பாதி.. ஆசையில் பாதி
பெண்மை நடக்கின்றதா
: உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்
மௌனம் கூட சத்தம் போடும்
பெ: ஜீவன் தவிக்கின்றதா.. தேகம் கொதிக்கின்றதா

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
...

பெ.குழு: ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆ..
...
: கங்கையைத் தேடி காவிரி நடந்து கலக்க வருகின்றதோ
பெ.குழு: ஸதகரி ஸதகரி நிதபம கமகம பதநித ககபம கரிஸத ரிரிஸ கரிமக பா
ரிரிஸ கரிமக பா
பெ: காதலின் நதிகள் கலக்கத் துடித்தால் மேடு தடுக்கின்றதோ
: நதிகள் இரண்டும் தாகமெடுத்து
நதிகள் இரண்டும் தாகமெடுத்து.. குடிக்கத் துடிக்கின்றதோ
பெ: காதல் இன்றி வாழ்வே இல்லை
காதல் கொண்டால் சாவே இல்லை
: பெண்மை சிலிர்க்கின்றதோ.. பேசத் தவிக்கின்றதோ

: சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
சந்திக்க வருவாயா
பெ: உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
: கண்ணே மனமில்லையா.. காவல் விடவில்லையா
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
பெ: ம்ம்ம் ம்ம் ம் ம்..
பெ.குழு: ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்..
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்.. ம்..
...