Showing posts with label டி.ராஜேந்தர். Show all posts
Showing posts with label டி.ராஜேந்தர். Show all posts

#311 இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒருதலை ராகம்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros

படம்: ஒருதலை ராகம்

இசை: டி. ராஜேந்தர்

எழுதியவர்: டி. ராஜேந்தர்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

...

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலையொன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...

#161 இந்திர லோகத்து சுந்தரி - உயிருள்ளவரை உஷா

படம்: உயிருள்ளவரை உஷா
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சசிரேகா
 
பெ: ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய்
: இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
ரதியென்பேன்.. மதியென்பேன்.. கிளியென்பேன்.. நீ வா..
உடலென்பேன்.. உயிரென்பேன்.. உறவென்பேன்.. நீ வா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
...

: தென்றலதன் விலாசத்தைத் தன் தோற்றமதில் பெற்று வந்தவள்
மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்
முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள்
சிந்து பைரவியைச் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்
பாவை புருவத்தை வளைப்பதே புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பாவை புருவத்தை வளைப்பதே புது விதம்
அதில் பரதமும் படிக்குது அபிநயம்
பெ: லாலாலலா.. லாலாலலா.. லாலாலலா.. லாலாலலா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தேனோ
: ம்..
பெ: மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ
: ம் ம்ம்ம்..
...

: கலைமகள் ஆடினால் சலங்கைகள் குலுங்கினால்
மின்னும் விழியை நல்ல வைரம் கண்டது
நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது
கருவிழி உருளுது.. கவிதைகள் மலருது
பாதங்கள் அசையுது.. பாவங்கள் விளையுது
எழில் நிலா ஆடும் விழா நடக்குது
தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு
பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள்
இந்த மானிடனும் மயங்கி விட்டான்.. அந்த மானிடமே மனதை விட்டான்
அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம்
பாண்டியப் பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்களிதழோரம்.. ஹா..
பாவை இதழது சிவப்பெனும்போது.. ihikhik பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பாவை இதழது சிவப்பெனும்போது.. பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது
பெ: லாலாலலா..
: ஆஹா..
பெ: லாலாலலா..
: ஓஹோ..
பெ: லாலாலலா..
: ஏஹே..
பெ: லாலாலலா..
: ஆ..

பெ: இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தேனோ
: ம்ஹும் ம்ம்ம்..
பெ: மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ
: ஓ.. ரதியென்பேன்.. மதியென்பேன்.. கிளியென்பேன்.. நீ வா..
உடலென்பேன்.. உயிரென்பேன்.. உறவென்பேன்.. நீ வா..
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளையென் உயிரினைப் பருகியும் சென்றாளோ
...

#144 சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ - பூக்களைப் பறிக்காதீர்கள்

படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஹோ..
காதல் ஊர்வலம் இங்கே.. கன்னி மாதுளம் இங்கே..
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஹா..
பெ: காதல் ஊர்வலம் இங்கே.. கன்னி மாதுளம் இங்கே..
...

பெ.குழு: துகுதுகு துகுதுகு தூதூதூ..
...
: விழியெனும் அருவியில் நனைகிறேன்.. குளிர்கிறேன்
பெ: கவியெனும் நதியினில் குதிக்கிறேன்.. குளிக்கிறேன்
: மரகத வீணை உன் சிரிப்பிலே
பெ: ihikhik
: மயக்கிடும் ராகம் கேட்கிறேன்
பெ: மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன்
: வாழை இலை போல நீ ஜொலிக்கிறாய்
பெ: காலை விருந்துக்கு எனை அழைக்கிறாய்

: காதல் ஊர்வலம் இங்கே
பெ: கன்னி மாதுளம் இங்கே..
...

பெ.குழு: பாபாபாபா பாபாபாபா பாபாபாபா பாபாபாபா பா..
...
: ஆஹஹா.. ஹா.. ஆ.. ஹஹஹா..
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்
பெ: காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்
: நட்சத்திரம் கண்ணில் சிரிக்கிதா
ihikhik மின்னி மின்னி என்னை அழைக்குதா
பெ: புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
: நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
பெ: நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்

: காதல் ஊர்வலம் இங்கே.. ததத்தா.. ததத துதுத்தூ..
பெ: கன்னி மாதுளம் இங்கே.. தரத்தா.. ரரர ரரத்தா..
: சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ.. சுகம்.. சுகம்.. ஹா..
பெ: குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட.. இதம் இதம்.. ஆ..
: காதல் ஊர்வலம் இங்கே..
பெ: தரத்தா.. ரரர ரரத்தா..
கன்னி மாதுளம் இங்கே..
: ரரரா.. ரருரு ருருரு..
...

#143 மாலை எனை வாட்டுது - பூக்களைப் பறிக்காதீர்கள்

படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
பெ: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
பெ: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
பெ: மாலை எனை வாட்டுது.. மண நாளை மனம் தேடுது
...

: விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
துயில் தன்னை இழந்து புலம்புகிறேன்
இளமையில் தூங்காதா.. இல்லை இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா.. எந்தன் மோகமும் தீராதா

பெ: மாலை எனை வாட்டுது
: மண நாளை மனம் தேடுது
...

பெ: உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா.. மடியை தலையணையாக்கிடவா
இரு கரம் சேர்த்திட வா.. இல்லை.. எனையே ஈர்த்திடவா

: மாலை நமை வாட்டுது.. மண நாளை இமை தேடுது
பெ: மாலை நமை வாட்டுது.. மண நாளை இமை தேடுது
: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
பெ: நாட்கள் நகராதோ.. பொழுதும் போகாதோ
: மாலை நமை வாட்டுது
பெ: மண நாளை இமை தேடுது
...

#136 சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது - ஒரு தாயின் சபதம்

படம்: ஒரு தாயின் சபதம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா

: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
பெ: கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
பெ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
&பெ: ஹோ..
: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
...

: மூடி வச்ச மொட்டுப் பூவுக்குள்ள வண்டு வந்தா வழி கிடைக்குமா
பெ: வண்டின் இதழ் மொட்டில் பட்டு விட்டால்
மொட்டின் இதழ் விட்டுக் கொடுக்குமே
: ஓ.. பூனைக்கு மணியைக் கட்டுறது யாரு
பெ: இப்படியே இருந்தா முடிவென்ன கூறு
: பெண்ணின் மன ஆழம்..
அறிந்துடும் முன்னே இறங்கிட எனக்கும் தயக்கம்
பெ: காந்தமதைக் கண்டா..
இரும்பது தானே இணைந்திட வருவது வழக்கம்.. ஹா.. ஹா..

: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது
பெ: இந்த மனசு தவிக்குது
...

: தினம் தினம் உன்னைப் பார்க்கையில
மனம் விட்டுப் பேசத் துடிக்கிறேன்
பெ: ஊரு கதை தானே நடக்குது.. உள்ள கதை உள்ளே முழிக்குது
: பார்க்க வரும் முன்னே துணிவது இருக்கும்
பெ: பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும்
: சிப்பிக்குள்ள முத்தைப் போல..
நெஞ்சுக்குள்ள காதலை மூடி மூடி வைப்பதும் ஏனோ
பெ: தொண்டைக்குழி வரைக்கும்..
அலையுது வார்த்தையும்.. வந்து வந்து திரும்புது ஏனோ.. ஹோ.. ஹோ..

: சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
பெ: கண்ணால தானே.. இந்த காதல் வளருது.. இந்த காதல் வளருது
: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
பெ: உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது
&பெ: ஹோ..
: சொல்லாமத்தானே..
&பெ: இந்த மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
மனசு தவிக்குது.. இந்த மனசு தவிக்குது
...

#122 மூங்கில் காட்டோரம் - பூக்கள் விடும் தூது

படம்: பூக்கள் விடும் தூது
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே.. என் காதோடு நீ பாட வா
மலரே.. உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...

அலைகளின் நாட்டியம் கரை மீதுதான்
ஆஹாஹா.. இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட.. இயற்கையும் பாட
இறைவா உன் கற்பனை.. வியக்கும் என் சிந்தனை
பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...

மேகமென்னும் பெண்ணொருத்தி மோகங்கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி.. கல்யாணம் நடந்ததடி கூடி
மழையோ பெற்ற பிள்ளை.. அதிலே பல கவிதை
ஹே.. மலைகளின் மேலே அருவி விழ..
ஆஹாஹா.. மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க.. நதியதை ரசிக்க
சலங்கை போல் நெல்மணி குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
லாலா லாலாலா.. லா லா லா லாலலா..
லாலா லாலா லாலாலாலா..
...

# 85 கூடையில கருவாடு - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & குழுவினர்

: கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு.. தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே.. புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே.. ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி.. ஆஹா..
ஓடாதடி காவேரி.. உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
: என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே..
...

# 84 வாசமில்லா மலரிது - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வாசமில்லா மலரிது..ihikhik வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

மாதங்களை எண்ணப் பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது.. மீனாட்சியைத் ஹ்டேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது.. வசந்தத்தைத் தேடுது
...