Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts

#316 என் காதலே.. என் காதலே - டூயட்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: டூயட்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
...
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்..
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா? உயிர் வாழ்வதா? இல்லை போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா? உனை அமுத விஷமென்பதா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடிக்கொண்டாய், நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்..
இது மாற்றமா? தடுமாற்றமா? என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா, இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு..
...

#309 மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ.. மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நாம் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

#288 ஒரு நாள் ஒரு பொழுது - அந்தி மந்தாரை

படம்: அந்தி மந்தாரை
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ஸ்வர்ணலதா

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம.. உசுரு அல்லாடுதே
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஒடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கைத்தொட்ட வாசம்

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

#149 கண்ணுக்கு மையழகு - புதிய முகம்

படம்: புதிய முகம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: பி.சுசீலா & உன்னி மேனன்

: ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரையழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
என்னோடு நீயிருந்தால் இருள் கூட ஓரழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

# 110 எது சுகம் சுகம் - வண்டிச்சோலை சின்ராசு

படம்: வண்டிச்சோலை சின்ராசு
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்

 பெ: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

: வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு
பெ: சாம வேதம் நீ ஓது.. வாடைத் தீயில் கூவும்போது
வா.. இனி தாங்காது.. தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...

பெ: கள்ளத் தீயும் ஒண்ணாச்சு.. காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு.. அதிலே தூக்கம் போயாச்சு
: பாரிஜாத உன் தேகம் பார்க்கப் பார்க்க போதையேறும்
நீ கொடு பேரின்பம்..
கையோடு கை சேர.. மெய்யோடு மெய் சேர

பெ: சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
: எது சுகம் சுகம்.. அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்.. மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்
வா.. வா.. மீண்டும் மீண்டும் தாலாட்டு
...