Showing posts with label எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி. Show all posts
Showing posts with label எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி. Show all posts

# 90 வான் நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம்

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா.. பொட்டிலா.. புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா.. ஊடலா.. கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா.. ஹா..
வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா.. நாட்டிலா.. ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

# 89 குமரிப் பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டுப் பிள்ளை

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

ஆ2: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ2: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...
ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: ஆ.. ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆ.. ஆஆ..
குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
...

ஆ1: திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம்.. தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
பெ1: அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக் கண்டு.. உயிர்க் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
ஆ1: நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
நானள்ளிக் கொள்ள.. அவள் பள்ளி கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்
பெ1: கை தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்
தொடுவார்.. தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம்

ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
...

ஆ1: பூவை என்பதோர் பூவைக் கண்டதும்
தேவை தேவையென்று வருவேன்
பெ1: இடை மின்னல் கேட்க.. நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
ஆ1: கொடுத்தாலும் என்ன.. எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
பெ1: அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம்

ஆ1: குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்
பெ1: குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தர வேண்டும்
காதல் நெஞ்சைத் தந்து விட்டு குடியிருக்க நீ வர வேண்டும்
ஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ.. ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆ
...
ஆ1: ihikhik குட் நைட்
பெ1: குட் நைட்
...

# 88 நாணமோ.. இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
...

: தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
...
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..

பெ: நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...


பெ: மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
...
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...

# 64 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - அவளுக்கென்று ஒரு மனம்

படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.ஜானகி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...