Showing posts with label புலமைப்பித்த. Show all posts
Showing posts with label புலமைப்பித்த. Show all posts

#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...