326 பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி
325 நிலவே நீ வரவேண்டும் - என்னருகில் நீ இருந்தால்
படம்: என்னருகில் நீ இருந்தால்
இசை: இளையராஜா
எழுதியவர்: நா. காமராசன்
பாடியவர்: இளையராஜா
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடி வா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...
ஓ.. ஓஓஓ..
இதய தாகம் கூடுதே.. அமுத யமுனை நீயே
பருவ ராகம் பாடுதே.. வசந்த சுகமும் நீயே
நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே
துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே
இணைந்து இருந்த சோலைகள்
உலகை மறந்த கோலங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...
ஓ.. ஓஓஓ..
பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம்
இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம்
மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே
காயங்கள் ஆனதேன் என் நோய்க்கு மருந்தே
கலைந்து பிரிந்த மேகங்கள்
இழந்த காதல் சோகங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடிவா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...
#322 சிங்காரச் சீமையிலே - நினைவுச் சின்னம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
#321 தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஆ.. ஆஆ.. ஆஆஆ..
...
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன?
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன?
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...
#319 ஆலோலம் பாடி அசைந்தாடும் - ஆவாரம்பூ
பாடியவர்: இளையராஜா
படம்: ஆவாரம்பூ
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...
ஆ.. ஆஆஆ.. மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்ப துன்பம் என்றும் உண்டு
தாயிழந்த துன்பம் போலே
துன்பமது ஒன்றும் இல்லை
பூமியென்ற தாயும் உண்டு
வானமென்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாயின்றி நின்ற பிள்ளை தன்னையென்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவைத் தந்தால் கூட
அதையுமிங்கு அறிந்தாயில்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊரெங்கள் பிள்ளையென்று
இன்று சொல்லக்கூடும்
உலகமுந்தன் சொந்தமென்று
உந்தனுள்ளம் பாடும்
நீ யாரோ, அன்பே அமுதே?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...
#318 ஜோடி நதிகள் பாதை - அன்பே ஓடி வா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ஹும்..
ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா..
லா.. லாலல்லாலா..
லா.. லாலலலலல லாலல்லாலா..
லலலலல.. லலலலல.. லலலலல.. லலலலல..
...
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...
அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்.. நீதான் பல்லவி
காயம் நேரலாம்.. நீதான் பௌர்ணமி
இது காதலில்லை..
இது காதலில்லையென்பதா?
நினைவுகள் மறையுமா? கனவுகள் கரையுமா?
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...
ஆஹா.. என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூமாலை தோளைத் தேடாதோ
நீயோ பூவனம்.. உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்.. என் வாழ்வே உன் வசம்
இது நேசமில்லை..
இது நேசமில்லை.. பாசமே..
இருவரும் பழகினோம்.. இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கைசேர்க்க
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...
#317 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி
#314 மாமரத்துக் குயிலு - ராஜா ராஜாதான்
#313 அன்பே ஆருயிரே - செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது
அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு
#310 காதல் என்பது பொதுவொடைமை - பாலைவன ரோஜாக்கள்
என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!
படம்: பாலைவன ரோஜாக்கள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: இளையராஜா
ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆ ஆஆஆஆ..
...
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
...
ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு
அந்த வழி போகாத ஆளிங்கு யாரு
புத்தனும் போன பாதைதான்
பொம்பளை என்னும் போதைதான்
அந்த வேகம் வந்திடும்போது
ஒரு வேலி என்பது ஏது
இது நாளும் நாளும் தாகந்தான்
உண்மைய எண்ணிப் பாரடா
இது இல்லாட்டா உலகம் இங்க ஏதடா
காதல் என்பது பொதுவொடைமை
கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை
அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா
நீயுந்தான் பொறக்க முடியுமா
இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா
...
#308 ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம்
படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: இளையராஜா
பெ.குழு: ம்ம் ம்ம்ம்.. ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்.. ம்..
...
ஆ: ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...
ஆ: மாடி வீட்டுக் கன்னிப் பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக் கண்ணை ஏங்க விட்டு
இன்னும் ஒன்னைத் தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையே
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யே
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்தப் பாசம்
அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டுச் செஞ்ச மோசமே
ஆ: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...
பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
...
ஆ: தண்ணியில கோலம் போடு
ஆடிக்காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனக் கூட்டி வந்து
அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் ஐயா
ஆசை வச்சாக் கிடைக்கும் ஐயா
ஆனா கிடைக்காது நீ ஆசை வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே
ஆ: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...
#306 நில்லாத வெண்ணிலா - ஆணழகன்
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & ஸ்வர்ணலதா
ஆ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...
ஆ: மான் துள்ளும் மலையாளத்தின் விழிச் சித்திரமே.. சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே.. நன்னிலமே
பெ: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ.. தித்தித்ததோ
ஆவணித் திருவோணத்தில் உன்னைச் சந்தித்ததோ.. சந்தித்ததோ
ஆ: பொன்னல்லவோ.. சிறு பூவல்லவோ
மெல்லத் தொடவோ.. என்னைத் தரவோ
பெ: தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ.. நான் தரவோ
ஆ: செம்மீன்கள் துள்ளுதே.. இங்கும் அங்கும்.. கண்ணோடையில்
பெ: சந்தோஷம் பொங்குதே .. முன்னும் பின்னும்.. உன் கூடலில்
நான் சொல்லவோ.. சின்னப் பெண் அல்லவோ..
ஆ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
பெ: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
ஆ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
...
பெ: நீ வர எதிர்பார்த்தது இந்த நந்தவனம்.. நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம்.. செங்கமலம்
ஆ: காமனின் கலை காண்பது இந்த அந்தப்புரம்.. அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது இங்கு சப்தஸ்வரம்.. சப்தஸ்வரம்
பெ: மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ.. இல்லை கொஞ்சுமோ
ஆ: உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ.. அள்ளிச் செல்லவோ
பெ: அன்றாடம் சேர்வது.. மன்னா.. மன்னா உன் பொன்மடி
ஆ: எந்நாளும் இன்பமே.. நீயே.. நீயே என் பைங்கிளி
ஓ.. மங்கையே.. பொங்கிடும் கங்கையே
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
ஆ: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...
#304 ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா - அக்னி நட்சத்திரம்
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா
ஆ: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...
ஆ: வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது.. நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
ஆ: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...
ஆ.குழு: பப்பா.. பாபப்பா.. பப்பா.. பாபப்பா..
ஆ: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
ஆ: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
ஆ: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
ஆ: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
ஆ & ஆ.குழு: தகதிகி துகுதுகு.. தகதிகி துகுதுகு ஹே..
...
ஆ: இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது.. எண்ணம் அசைபோடுது
கண்கள் வலை வீசுது.. காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்
ஆ: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா.. ஆ.. ஆ..
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா..
...
#302 அந்த நெலாவத்தான் - முதல் மரியாதை
படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: அந்த நெலாவத்தான்.. நான் கையில புடிச்சேன்.. என் ராசாவுக்காக..
...
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
ஆ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
...
பெ: மல்லு வேட்டி கட்டியிருக்கு.. அது மேல மஞ்ச இன்னும் ஒட்டியிருக்கு
ஆ: முத்தழகி கட்டிப் புடிச்சு முத்தங் குடுக்க மஞ்ச வந்து ஒட்டிக்கிருச்சு
பெ: மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஆ: ம்.. ஏதுடா வம்பாப் போச்சு.. லவுக்கையும் கிடையாது
பெ: சொக்கம்பட்டிச் சேலை கட்டிப் பூத்திருக்கு பூஞ்சோலை
ஆ: பூவு ஒண்ணு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
பெ: எக்குத்தப்பு வேண்டாம்.. ம்ஹும்..
ஆ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
பெ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
ஆ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
பெ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
ஆ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்
ஆ: என் ராசாத்திக்காக
...
ஆ: ரத்தினமே முத்தம் வைக்கவா.. அதுக்காகப் பட்டனம் போய் வக்கீல் வைக்கவா
பெ: வெக்கத்தையும் ஒத்தி வைக்கவா.. அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
ஆ: ஓடி வா ஓடைப் பக்கம்.. ஒளியலாம் மெதுவாக
பெ: அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக
ஆ: காத்தடிச்சா தாங்காதடி மல்லியப்பூ மாராப்பு
பெ: கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
ஆ: அடி போடி புள்ள எல்லாம் டூப்பு
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
ஆ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
ஆ: அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
...
#300 இந்திரன் வந்ததும் - ஆண் பாவம்
படம்: ஆண் பாவம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
ஆ: ஹே வந்தனம் வந்தனம்
ஆ.குழு: வந்தனம் வந்தனம்
ஆ: வந்த சனமெல்லாம்
ஆ.குழு: குந்தணும் குந்தணும்
ஆ: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
ஆ: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
ஆ: கலை வளர்ந்ததும்
ஆ&ஆ.குழு: இங்கேதான்
ஆ: காதல் சொன்னதும்
ஆ&ஆ.குழு: இங்கேதான்
ஆ: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: கட்சி வளர்த்தது ஆட்சி புடிச்சது இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சது இந்தச் சினிமாதான்
ஆ: ஏ..
ஆ&ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
எங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
...
ஆ: கைலாச நாதன முருகனக் கண்ணால
பார்க்கத்தான் முடியுமா கூறு
அம்பத்தஞ்சு காசு நீ குடுத்துட்டாத் தன்னால
கடவுளப் பார்க்கலாம் பாரு
ஆ: காத்தவ
ஆ.குழு: ராயன்
ஆ: மதுரை
ஆ.குழு: வீரன்
ஆ: திரையில தானே
ஆ.குழு: புரிஞ்சிருக்கு
ஆ: காந்தியக் கூட படத்துல தானே இன்னைக்குத் தேசம்
ஆ.குழு: தெரிஞ்சிருக்கு
ஆ: அட பசி தூக்கம் பறந்தாச்சு.. பழசெல்லாம் மறந்தாச்சு
கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டுல குத்தம் குறைஞ்சிருக்கு
ஆ.குழு: அட கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டுல குத்தம் குறைஞ்சிருச்சு
ஆ: ஏ.. இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ&ஆ.குழு: இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
ஆ: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
ஆ: கலை வளர்ந்ததும்
ஆ&ஆ.குழு: இங்கேதான்
ஆ: காதல் சொன்னதும்
ஆ&ஆ.குழு: இங்கேதான்
கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
...
ஆ: எத்தனையோ மேதைங்க ஞானிங்க வீரங்க
வெள்ளித் திரை தந்தது இங்கே
ஹரிச்சந்திரன் நாடகம் பார்த்துத்தான் காந்தியும்
சத்தியத்தை நம்பினார் அங்கே
கிசு கிசு
ஆ.குழு: போட்டு
ஆ: கேள்வி பதில்
ஆ.குழு: போட்டு
ஆ: பத்திரிக்கை வந்தா
ஆ.குழு: லாபமுங்க
ஆ: வாழ்க்கைக்கு
ஆ.குழு: இங்கே
ஆ: வடிகால்
ஆ.குழு: வேணும்
ஆ: சினிமா ஒண்ணே
ஆ.குழு: போதுமுங்க
ஆ: அட பகலெல்லாம் உழைச்சீங்க இரவெல்லாம் சிரிச்சீங்க
வெள்ளித் திரையில தங்கம் விளைஞ்சது எங்க சினிமாதான்
ஆ.குழு: அட வெள்ளித் திரையில தங்கம் விளைஞ்சது எங்கச் சினிமாதான்
ஆ: ஏ.. இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
ஆ: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
ஆ: கலை வளர்ந்ததும்
ஆ&ஆ.குழு: இங்கேதான்
ஆ: காதல் சொன்னதும்
ஆ&ஆ.குழு: இங்கேதான்
ஆ: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: கட்சி வளர்த்தது ஆட்சி புடிச்சது இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சது இந்தச் சினிமாதான்
ஆ: ஹே..
ஆ&ஆ.குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா..
ஆ: அட..
ஆ&ஆ.குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா..
...
#299 ஓ.. எந்தன் வாழ்விலே - உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...
பண்ணோடு நாளும் இணையும் தாளம்
என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்
கல்யாண ராகம் விழிகள் பாடும்
கால் போடும் கோலம் கவிதையாகும்
சந்தோஷத் தென்றல் என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும்
அன்பாலே.. அன்பாலே பண் பாடி
உன் நிழலென வருவேன்
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...
செந்தாழம்பூவே கதைகள் பேசு
சிங்காரக் காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காகத்தானே இதயம் என்றான்
நானந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே.. விழாவே கொண்டாட
கண் மயங்குது கிளியே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...
#298 சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்
படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஆஆஆஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ.. ஆ..
தம்நம்த நம்த நம்தம் நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்.. நம்த நம்தம்.. நம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
...
திருமுகம் வந்து பழகுமோ.. அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ.. அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி..
விழிகள் அழுதபடி.. கரங்கள் தொழுதபடி..
சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி
இசை எனும் மழை வரும்.. இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள்.. காதலின் வேதங்கள் ஆடிடுமோ.. பாடிடுமோ..
ஆடிடுமோ.. பாடிடுமோ..
ராஜ தீபமே.. எந்தன் வாசலில் வாராயோ..
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்..
ராஜ தீபமே..
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே..
ஸஸஸஸ நிஸநிஸ நிஸரிஸ நிஸநிஸ
கரிஸநி ரிஸநிஸ பதநிஸ ரி
ரிஸரிக ஸகரிக நிஸரி நிஸரி
ஸநிதப தஸநி ஸநிதப மபதப
ஸா நிஸநி நிஸநி நிஸநி தப
ப மகப நி தஸநி தபமப
ஸரிக ஸரிக நிஸரிகரிகமப கமப கமப மபத பதநி
நித நிஸ ஸநி தநி
பதநி ஸககக ஸநிஸரி.. கரிஸநி.. ஸநித நிதப
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தரிகிடதோம்..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
...
#297 காதல் உன் லீலையா - ஜப்பானில் கல்யாணராமன்
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
லாலா லாலா லாலா லால லாலா.. லாலலா..
லாலா லாலா லாலா.. லாலா லாலலா..
காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
...
வெள்ளை நிலா வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்.. கந்தல் மனம் என்னாகும்
ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்.. எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்
இந்தக் காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
...
ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான்
கோதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைதான்
வெட்கம் இன்று தீராதா.. முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டிப் பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா
அட காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
...
#290 காதல் கசக்குதய்யா - ஆண்பாவம்
படம்: ஆண்பாவம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
...
யாராரோ காதலிச்சு.. யாராரோ காதலிச்சு உருப்படல.. ஒண்ணும் சரிப்படல
வாழ்க்கையிலே என்றும் சுகப்படல
காதலைப் படமெடுத்தா ஓடுமுங்க.. தியேட்டரிலே சனம் கூடுமுங்க
தேவதாஸ்.. அவன் பார்வதி.. அம்பிகாபதி.. அமராவதி
கதையக் கேளு.. முடிவப் பாரு..
கடைசியில் சேராம வாழாம செத்தாங்க
எனக்கிந்தக் காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல் கசக்குதய்யா..
...
எத்தனை சினிமா எத்தனை ட்ராமா பாத்தாச்சு
எத்தனை டூயட் எத்தனை ட்யூனு கேட்டாச்சு
இத்தனையும் பார்த்து இத்தனையும் கேட்டு என்னாச்சு
புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு
கிட்டப்பா அந்த காலத்துல.. காயாத கானகத்தே
பி.யு.சின்னப்பா வந்த காலத்துல.. காதல் கனிரசமே
மன்மத லீலை எம்.கே.டி. காலத்துல
நடையா இது நடையா.. நம்ம நடிகர் திலகம் பாணியில
ஹலோ.. ஹலோ.. சுகமா.. அட.. ஆமா நீங்க நலமா
எங்கேயுந்தான் கேட்டோம் அண்ணன் எம்.ஜி.ஆர் பாட்டுக்கள
இந்தக் கால இளைஞன் செய்யும் காதலுக்கு
இளையராஜா எந்தன் பாட்டிருக்கு
வீட்டுல அதைப் பாடுங்க.. பொண்டாட்டிய லவ் பண்ணுங்க
நம்ம தகப்பன் பேச்சை.. தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது
எனக்கிந்தக் காதல் கசக்குதய்யா.. வர வர காதல் கசக்குதய்யா
மனந்தான் லவ்வு லவ்வுன்னு அடிக்கும்.. லபோன்னுதான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்.. பைத்தியம் புடிக்கும்
காதல்.. மோதல் சாதல்.. காதல் காதல்..
கசக்குதய்யா.. கசக்குதய்யா.. கசக்குதய்யா..
...