Showing posts with label பால பாரதி. Show all posts
Showing posts with label பால பாரதி. Show all posts

#292 ஆஹா.. கனவேதானா - அமராவதி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

கட்டுக் கூந்தல் பார்த்தேன்.. தரையில் வந்த மேகமா
பட்டுத் தோள்கள் பார்த்தேன்.. பாரிஜாத தேகமா
முதுகு வண்ணம் பார்த்தேன்.. முல்லைப் பூவின் பாகமா
மொட்டு வண்ணம் பார்த்தேன்.. கட்டுக் காவல் மீறுமா
கழுத்து வரைக்கும் பார்த்தேன்.. சில கணக்கு வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்.. அடி.. பறந்து பறந்து பார்த்தேன்
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே
தேக வண்ணம் காட்டித் தீ வளர்த்த முல்லையே
பூமுகத்தைக் காட்டு.. பொறுமையின்னும் இல்லையே
முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன
குளித்து முடித்த பெண்ணே.. உன் கூந்தல் தடுப்பதென்ன
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

#291 தாஜ்மஹால் தேவையில்லை - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெ: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சு காதலே
பெ: கறை மாற்றி நாமும் மெல்லக் கரையேற வேண்டுமே
: நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

பெ: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவமென்பதா
பெ: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெ: வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

#158 புத்தம் புது மலரே - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
...
புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்.. என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்.. என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்
புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
...

செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லிற் சிலை போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலை வார வேண்டும்
நீ வந்து இலை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என்னிமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
...

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக் கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்
கையோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்

புத்தம் புது மலரே.. என்னாசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்.. என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்கிறேன்.. என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன்.. தவித்தேன்
...

# 42 உன்னைத் தொட்ட தென்றல் - தலை வாசல்

படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெ: பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...

: தலைவி உந்தன் கண்பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே
பெ: உறங்கும்போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதோ உச்சி வேர்க்கிறேன்
: இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
ihikhik உன்னைக் கேட்கிறேன்

பெ: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
: உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...

பெ: உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
: பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
பெ: நீ பார்வையில் காதலன்.. பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே

: ihikhik உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெ: பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
: உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ஹூம்.. ihikhik
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன
பெ: ihikhik
...

# 41 அதிகாலைக் காற்றே நில்லு - தலை வாசல்

படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆ.. ஆஆஆஆ ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
ஆஆஆஆ.. ஆஆஆஆ..
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...

இளமையின் அலைகளில் பருவமும் மிதந்தது
இமைகளின் அசைவினில் உலகமும் பணிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
மாலை மேகம் சோலையாகும்
வானம் எங்கள் சாலையாகும்
தாமரை குடை விரிக்கும்

அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
...

மலரினம் சிரித்திட திசைகளும் எழுந்தது
பொழுதுகள் விடிந்திட தவங்களும் புரிந்தது
ஓ.. ஓஓஓ ஓஓஓ ஓஓ..
வானவில்லின் வண்ணம் யாவும்
பாதம் வந்தே கோலம் போடும்
காவியம் தலை வணங்கும்

அதிகாலைக் காற்றே நில்லு.. இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே.. மனதும் பறந்ததே
இது ஒரு புது சுகமே
...