Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

#219 ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
...
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்த மானிடர்க் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களிம் வாசமெல்லாம் ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்.. உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.. உந்தன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

# 90 வான் நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம்

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா.. பொட்டிலா.. புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா.. ஊடலா.. கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா.. ஹா..
வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா.. நாட்டிலா.. ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

# 64 உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - அவளுக்கென்று ஒரு மனம்

படம்: அவளுக்கென்று ஒரு மனம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.ஜானகி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும்.. வருவேன்
ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
...

# 55 சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் - மீண்டும் கோகிலா

படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் &  எஸ்.பி.ஷைலஜா

பெ: ம்.. ம்ஹும் ஹும்ஹும்..
ம்ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்.. ம்ஹும் ஹும்ஹும்..
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...

பெ: மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர் நாள் மூன்று தமிழ்ப் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்.. ம்ஹும்ஹும்.. ம்ம்ம்..
: ஆ.. ஆஆஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ ஆஆ ஆ..
கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...
: சபாஷ்..
...
: பலே..
...

: வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே.. மோதும் விரகத்திலே செல்லம்மா..
ம்ஹும்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..

பெ: சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா.. பேசவும் தோணுதடி
...