Showing posts with label தீபன் சக்கரவர்த்தி. Show all posts
Showing posts with label தீபன் சக்கரவர்த்தி. Show all posts

# 49 செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள்

படம்: மெல்லப் பேசுங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & உமா ரமணன்



பெ: கூவின பூங்குயில்.. கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய்.. எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
...

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
...

: வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
பெ: தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
: காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்.. ஆஆஆஆ..

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
...

பெ: அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
: கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
பெ: நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்

: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
பெ: ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..
ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..
...

#16 ஆனந்த தாகம் உன் கூந்தல் - வா இந்தப் பக்கம்

படம்: வா இந்தப் பக்கம்
இசை: ஷ்யாம்
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & எஸ். ஜானகி

: ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
...

: உண்மையில் என் மயில் ஆடுமுன்
பெ: ஆடுமுன்..
: பொன் மழைக்காலம் போய்விடும்
பெ: போகட்டும்..
: ஆசை ஆறி விட நேர்ந்திடும்
பெ: நேருமோ..
ராத்திரி அலைகள் ஓயட்டும்
: ஓயுமோ..
பெ: மூத்தவர் தலைகள் சாயட்டும்
: சாயுமோ..
பெ: தீபத்தின் விழிகள் மூடட்டும்
: மூடுமோ..
ஆடை கொடு
பெ: ஆளை விடு
: தேகம் தொடு
பெ: போதும் விடு
: தாகம் ஊறுதே
பெ: வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே

: ஆனந்த தாகம்
...

பெ: கன்னியின் மேனி வேர்க்குதே
: ஏனம்மா..
பெ: ஜன்னலின் கம்பி பார்க்குதே
: அட ராமா..
பெ: பேசும் ஓசையொன்று கேட்குதே
: கேட்குமோ..
திரிகளை விரல்கள் தூண்டுதே
பெ: தூண்டாதே..
: அணைகளை வெள்ளம் தாண்டாதே
பெ: தாண்டாதே..
: ஆசை நாகம் வந்து தீண்டுதே
பெ: தீண்டாதே..
நாணம் வந்து ஊர்கின்றது
: தீயில் விஷம் சேர்கின்றது
பெ: கண்கள் மூடுதே
: அணைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே

: ஆனந்த தாகம்
பெ: லாலால லாலா..
: உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெ: லாலால லாலா லாலலா..
: நாணம் தோற்குமே
பெ: லாலா லாலலா..
: அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
: நேரம் பார்க்குமே
பெ: ஆஆ ஆஅஆ..
: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
: நேரம் பார்க்குமே
பெ: லாலா லாலலா..
...