# 36 கள்ளத்தனமாக கன்னம் வைத்த - உள்ளே வெளியே

படம்: உள்ளே வெளியே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
ஒரு மெத்தையிட்டுப் பக்கம் வரணும்
: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...

: கூடு விட்டுக் கூடு பாய வா.. ஆடிவிட்டு மீதி கூட வா
பெ: பாடிவிட்டு நீயும் கூட வா.. கோடி சுகம் நானும் கூறவா
: இன்ப ஜுரம்தான் ஏறுதே.. எல்லை வரம்பை மீறுதே
பெ: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே

: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
சொல்லித் தர வேணும் தொட்டுத் தொட்டு நாயகனே
...

பெ: பூத்திருந்து பூவும் வாடுதே.. பார்த்திருந்து நோவும் கூடுதே
: காத்திருந்து நேரம் போனதே.. காமனுக்கும் மோகம் ஆனதே
பெ: கண்ட கனவா.. காதலா.. காதல் தலைவா.. காவலா
: என்னை மறந்தே இன்ப மருந்தே
உள்ளத்தில் எண்ணத்தில் தித்திப்பைப் போடுதே

பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
பெ: உள்ளே இருக்கு ஹோ.. உந்தன் நினைவு ஹோஹோ..
: இந்த தத்தைக் கிளி முத்தம் தரணும்
பெ: கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே
: கிள்ளித் தர வேணும் உள்ளமெனும் தாமரையே
...

0 மறுமொழிகள்:

Post a Comment