# 37 சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி - உள்ளே வெளியே

படம்: உள்ளே வெளியே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
சக்கரைக் கட்டி சக்கரைக் கட்டி சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி சித்திரக் குட்டி வந்தது சுத்தி
பெ: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
: கொஞ்சமா நஞ்சமா
பெ: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...

: மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட
ரயிலோடும் வழி மேலே படுத்தேனடி
ரயிலோடி வரும் முன்னே மயிலோடி வருமென்று
நினைத்தே அதுபோல நடித்தேனடி
பெ: நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும்
வளைத்தாயே இள மானை வசமாகத்தான்
பல காலம் வலை போட்டு.. மன வீட்டில் துளை போட்டு
நுழைந்தாயே திருடன் போல் மெதுவாகத்தான்
: காதல் வரும்போது காவல் எதுக்கு
பெ: ஏது இனிமேலும் ஊடல் வழக்கு
: காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா

: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...

: இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும்
மணித்தேரே உனக்காக வடம் போடவா
பெ: ஸ்..ஹா..
: இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர
பசும்பொன்னே உனைக் கொஞ்சம் புடம் போடவா
பெ: விரலாலே தொடலாமா.. நகக் காயம் படலாமா
இளசான திருமேனி அதைத் தாங்குமா
அலுக்காமல் சலிக்காமல்.. அணைத்தாலும் வலிக்காமல்
இருந்தாலே தருவேனே இதழோரமா
: காயம் படக்கூடும் வேகம் பிறக்க
பெ: ம்.. கூச்சல் இடக்கூடும் நானும் தவிக்க
: பூவை ஒரு பூவும் என மெல்லப் பறிப்பேன்
கட்டிக்கோ.. கட்டிக்கோ
பெ: ஹா.. ஒட்டிக்கோ.. ஒட்டிக்கோ.. கிட்ட வா.. கட்டழகா

பெ: சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
: எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு
என்ன செஞ்சு அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு
பெ: கொஞ்சமா நஞ்சமா
: கொஞ்சத்தான் பஞ்சமா.. அம்மம்மா.. என்ன சொல்ல
சக்கரைக் கட்டி.. சக்கரைக் கட்டி.. சந்தனப் பெட்டி
பெ: இந்தச் சித்திரக் குட்டி.. சித்திரக் குட்டி.. வந்தது சுத்தி
...

0 மறுமொழிகள்:

Post a Comment