# 112 வா.. காத்திருக்க நேரமில்லை - காத்திருக்க நேரமில்லை

படம்: காத்திருக்க நேரமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...

: ஏதோ ஓர் பாதரசம் ஏறும் உயிர் நாடியிலே.. ஹா..
காந்தம் உருவாகுமடி கூடும் இளஞ்சோடியிலே
பெ: வளைக்கைகள் நீ சொன்னால் வளைக்காமல் போகாது
வலிக்காது சீராட்டு.. சலிக்காது பூ மாது
: ஆசை ஊற்று போலே வெள்ளமாகப் பாயும் நேரமே
ஆடை ஈரமாக நீயும் நானும் நீந்த வேண்டுமே

பெ: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓ..
...

பெ: மாலை மணி ஐந்தடித்தால் மான்தான் உனைத் தேடி வரும்
காவல் ஒன்று போட்டு வைத்தால் கால்கள் அதைத் தாண்டி வரும்
: இடை சேர்ந்த பின்னாலே இடைவேளை கூடாது
இணை சேர்ந்த ஜீவன்கள் தனித்தென்றும் வாழாது
பெ: அன்பே.. நீல வண்ணம் வானையென்றும் நீங்கிடாது
மீட்டும் விரலில்லாது வாழ்வதேது வீணையானது

: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
நீ பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
பெ: விரக தாபம் விளையும் காலம்
விலகியிருந்தால் வாடை வாட்டும்.. வா..
: வா.. காத்திருக்க நேரமில்லை.. ஓஓ..
பெ: நான் பூத்திருக்கும் வாச முல்லை.. ஓஓ ஓஓ..
...

1 comment:

  1. காத்திருக்க நேரமில்லை இந்த படத்தில் வரும் "துளியோ துளி முத்து துளி" என்ற பாடல் வரிகள் இருந்தால் நண்பர்கள் தயவு செய்து பதிவிடவும் !!! நன்றி

    ReplyDelete