#149 கண்ணுக்கு மையழகு - புதிய முகம்

படம்: புதிய முகம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: பி.சுசீலா & உன்னி மேனன்

: ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்..
பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுரையழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடுதானழகு
இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

பெ: ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு
அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறை கூடப் பேரழகு
என்னோடு நீயிருந்தால் இருள் கூட ஓரழகு

பெ: கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகு
அவருக்கு நானழகு
...

0 மறுமொழிகள்:

Post a Comment