#230 ஓலை குருத்தோலை காத்துல ஆடுது - அறுவடை நாள்

படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.ஜானகி

பெ.குழு: லல லல்ல லாலாலா.. லாலாலா லாலாலா..
லல லல்ல லாலலா லா..
...
பெ: ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
கதை கதையாம் காரணமாம்.. கல்யாணத் தோரணமாம்
காத்தாடுது.. ஆஹா.. நல்ல நல்ல நல்ல நல்ல..
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
...

பெ: சந்தனத்தைப் பூசாம.. சம்மந்தத்தைப் பேசாம
சேர்ந்தது என்ன.. காத்தும் பூவும் கூசாம
பெ.குழு: சந்தனத்தைப் பூசாம.. சம்மந்தத்தைப் பேசாம
பெ: சேர்ந்தது என்ன.. காத்தும் பூவும் கூசாம
இதுவும் பொதுவா இலக்கியந்தானே.. இயற்கை எழுதும் இலக்கணமோ
மேகம் ஒரு ஈரச் சேலை.. வானத்துல காயப் போட
தூவும் மழைச் சாரல் போல தினமும் அதிசயம் நடக்குது

பெ: ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
...

பெ.குழு: லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
லுலுலுலுலுலுலுலு லுலுலுலுலுலுலுலு
...

பெ: மல்லிகையும் பூத்தாச்சு.. அல்லியுந்தான் பூத்தாச்சு
கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பார்த்தாச்சு
பெ.குழு: மல்லிகையும் பூத்தாச்சு.. அல்லியுந்தான் பூத்தாச்சு
பெ: கன்னிப் பொண்ணுதான் காத்திருந்து பார்த்தாச்சு
உலகம் முழுதும் பருவத்தின் கோலம்.. மனது முழுதும் கனவு மயம்
பொண்ணு இவ சின்னப் பொண்ணு.. பேரில் மட்டும் கன்னிப் பொண்ணு
பூவரசம் பூவப் போல சிரிச்சா.. புதுப்புது விதத்துல

பெ: ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
பெ.குழு: கதை கதையாம் காரணமாம்.. கல்யாணத் தோரணமாம்
காத்தாடுது.. ஆஹா..
பெ: நல்ல நல்ல நல்ல நல்ல..
ஓலை குருத்தோலை காத்துல ஆடுது.. கண்ணனைத் தேடுது
வாழை இளவாழை வாசலில் ஆடுது.. வேளையக் கூறுது
...

0 மறுமொழிகள்:

Post a Comment