#229 தேவனின் கோவில் மூடிய நேரம் - அறுவடை நாள்

படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
 

: ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம்.. ப்ரேம வஸ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதப் ப்ரேமம்.. ப்ரீதி வஸ்யப் ப்ரீதம்
ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்.. தந்துனா மமச்சீவனம்
மமச்சீவனம் மமச்சீவனம் மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமச்சீவிதம்.. மமச்சீவனம் மமச்சீவனம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி..
பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...

பெ: நானொரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி
நானொரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்களெல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி

பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...

: ஏ.. ஏஏஏ.. தந்தன தந்தன தந்தனா.. ஆஆஆ..
தந்தானத் தந்தானத் தானன்னா.. நநா.. தந்தானா.. தந்தானா.. ஹே..
...
பெ: ஒரு வழிப்பாதை என் பயணம்.. மனதினில் ஏனோ பல சலனம்
ஒரு வழிப்பாதை என் பயணம்.. மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று.. தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர்க் காதலி

பெ: தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம் நானென்ன கேட்பேன் தெய்வமே
...

0 மறுமொழிகள்:

Post a Comment