#233 அழகிய நதியென - பாட்டுக்கு ஒரு தலைவன்

படம்: பாட்டுக்கு ஒரு தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ராபெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
...
பெ: அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
தேகந்தான் மோகத்தில் வாட.. நாளுந்தான் மோனத்தில் கூட
: துள்ளும் அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
பெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
...

: தேடிய தேவதையே.. திரை மறைத்து மூடிய மாங்கனியே
ஓடிடும் காவிரியே.. உனை நினைத்துப் பாடிடும் இன்னிசையே
பெ: நாயகன் பூமடிமேல் நானும் பல நாடகமாட வந்தேன்
மாயவன் குழலிசையில் எனது மனம் மயங்கிய நிலையிருந்தேன்
: தேரினில் ஏற வந்தேன்.. திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன்
ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க.. ஓடையில் நீந்த வந்தேன்
பெ: கேட்டது யாவையும் நான் தருவேன்.. இனி கேள்வி என்ன.. எனை அணைத்திட

: அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
பெ: விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
...

பெ.குழு: ரப்பப்ப ரப்பப்பப்பப் பாபா.. ரப்பப்ப ரப்பப்பப்பப் பாபா..
பாபா.. பாபா.. பாபாபா.. பாபா.. பாபா.. பாபாபா..
...

பெ: கோடியில் நீ ஒருவன்.. பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன்
கூடிடும் என் துணைவன்.. எனது மனக் கோவிலில் நீ இறைவன்
: ஆடிடும் பெண்ணழகே.. ஆசைகளை ஆள்கிற பேரழகே
தூவிய பூமலர் மேல் தோளணைத்துத் தூங்கிடும் தேன் துளியே
பெ: வானகம் வையகமும் வாழ்த்த வரும் நாளினைக் கேட்டு வந்தேன்
நானுன்னை சேர வரும் நாளில் ஒரு நாட்டியமாட வந்தேன்
: மெல்லிய பொன் இடை மேடையிலே அரங்கேற வரும்.. தமிழ் மகனடி

பெ: அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
: விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
பெ: தேகந்தான் மோகத்தில் வாட
: நாளுந்தான் மோனத்தில் கூட
பெ: துள்ளும் அழகிய நதியென.. அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
: விழிகளில் பலவித விரகமும் பெருகிட.. வழியது திறந்ததென்ன
பெ.குழு: ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு.. ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு
ஜிமுக்கு ஜிமுக்கு சக்கு ஜிமுச்சச்சா
...

0 மறுமொழிகள்:

Post a Comment