#267 செல்லக் குழந்தைகளே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: வாணி ஜெயராம் & மாதுரி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்.. ஆடுங்களே
...

பெ1: காற்றும் இவனுக்குக் கட்டுப்படும்.. இவன் செப்படி வித்தைக்காரன்
தரை வேண்டாம் என்றான்.. தலைகீழாய் நின்றான்
பெ2: தொண்டு கிழங்களும் கண்டு பயப்படும் காரியம் கற்று வைத்தான்
இவன் பார்த்தால் போதும்.. கடல் பாலாய் மாறும்
பெ1: இனி நம் வீட்டிலே தினம் தீபாவளி
பெ2: இங்கு நாம் பாடுவோம் புது கீதாஞ்சலி
பெ1&பெ2: அலை நான்கு விளையாடும் கவி பாடி

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

பெ2: ஜன்னல் திறந்தொரு மின்னல் நுழைந்தது என்னென்ன விந்தைகளோ
இனி ஊஞ்சல் ஆடு.. இது தேவன் வீடு
பெ1: உண்மை நிலவையும் பொம்மையென இவன் கைகளில் வைத்திருப்பான்
புது லீலை மன்னன்.. இனி எங்கள் அண்ணன்
பெ2: அந்த ஆகாயமே எங்கள் பாயாகுமே
பெ1: இனி நாம் தூங்கவே வெகு நாளாகுமே
பெ1&பெ2: நம் சொந்தம் எந்நாளும் மாறாதே

பெ1: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
பெ1: பாடுங்களே.. கொண்டாடுங்களே.. ஒரு தோழன் துணைக்கு வந்தான்
பெ1&பெ2: ஆடுங்களே
பெ2: செல்லக் குழந்தைகளே.. துள்ளும் வசந்தங்களே..
...

0 மறுமொழிகள்:

Post a Comment