#277 ஹோலி ஹோலி ஹோலி - ராசுக்குட்டி

படம்: ராசுக்குட்டி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...
பெ.குழு: தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாததத்தா தாததத்தா தீதிதத்தா தாதா..
தாத்ததத்தா தத்தா தத்தா.. தாத்ததத்தா தத்தா தத்தா.. ஹோ..
...

: கொத்துக் கொத்துப் பூவாக முத்து முத்து மாலைகள்
புன்னகையில் பார்த்தேன்.. அள்ளி அள்ளிச் சேர்த்தேன்
பெ: ஒட்டி ஒட்டி உறவாட.. கட்டிக் கட்டிக் கலந்தாட
முத்தமென்னும் பூந்தேன் கொட்டிக் கொட்டிக் கொடுத்தேன்
: சிந்தாமலே ஏந்திய சிந்தாமணி
கையோடு நான் வாங்கிய செம்மாங்கனி
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
பெ: ஒரு மல்லிகைப் பந்தாக நெஞ்சம் மஞ்சத்தில் வந்தாடும்
அன்புக் கண்ணா.. கண்ணா.. சொன்னேன் உன்னிடம் காதல் சங்கீதம்

: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
பெ: லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
...
பெ.குழு: ஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
...

பெ: கங்கைக் கரை ஓரத்திலே காத்திருக்கும் நேரத்திலே
கண்ணன் வருவானோ.. கையில் எடுப்பானோ
: வெள்ளியலை மேடையிலே மங்கை நீராடையிலே
உள்ளங் கொதிக்குதடி.. அள்ளத் துடிக்குதடி
பெ: அம்மாடியோ பார்வையும் அம்பானது
பொன்மானுக்கும் ஆசை உண்டாகுது
பெ.குழு: நாநாநநா.. நாநந நநநநா..
நாநாநநா நாநா நாநாநநா..
: அந்த உச்சிமலை மேலே ஒரு வெள்ளிப்பனி மாடம்
அடி ராதே.. ராதே.. நாளும் அங்கொரு காதல் கும்மாளம்

பெ: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
லாலி லாலி லாலி.. கதை சொன்னாள் காதல் தோழி
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
சொல்லச் சொல்லத் தேனாய்ப் பாய்ந்தது
உள்ளம் ரெண்டும் தானாய்ச் சேர்ந்தது
: ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி..
...

0 மறுமொழிகள்:

Post a Comment