#282 பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
: கல்யாண வைபோகந்தான்
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
...
பெ.குழு: ராரா ராரா ரா.. ராரா.. ராரா ரா..
ராரா ராரா ரா.. ராரா ராரரா..
...

: மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல் காதல் கொண்டாடுதே
பெ: ஆலம் விழுதோடு கிளிக் கூட்டம் ஆடும் காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசை பாடித் திரியும் நேரம் இதுவல்லவா
: ஏதேதோ எண்ணம் தோன்ற.. ஏகாந்தம் இங்கே
பெ: நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே
: வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
பெ: ஆசைகள் ஈடேறக் கூடும்

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...

பெ: ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன ஜீவன் உன்னோடுதான்
தேவி ஶ்ரீதேவி பூவாரம் சூட.. தேவன் என்னோடுதான்
: நீல வான் கூட நிறம் மாறிப் போகும்.. நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன.. காதல் தடம் மாறுமா
பெ: ஓயாமல் உன்னைக் கொஞ்சும் ஊதாப்பூ வண்ணம்
: ராஜாவின்.. ihikhik முத்தம் கொள்ளும் ரோஜாப்பூ கன்னம்
பெ: வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
: ஆனந்த எல்லைகள் காட்டும்

: பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
பெ: நீரூற்று என் தோள் கொஞ்சப் பார்த்தேனே இன்று
: தீர்த்தக்கரை ஓரத்திலே
பெ: தேன் சிட்டுகள் உள்ளத்திலே
: கல்யாண வைபோகந்தான்
பூங்காற்று உன் பேர் சொல்லக் கேட்டேனே இன்று
...

0 மறுமொழிகள்:

Post a Comment