#279 சீவி சிணுக்கெடுத்துப் பூவ - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி


: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா.. தேவலோகந்தான் பார்ப்போம்
: தேடிப் பார்க்கலாம் வாம்மா வாம்மா.. தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டிப் பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்.. கேக்கவில்லையே மனசு
: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்.. சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமோ தந்ததொரு தொந்தரவுதான்
: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினாப் பிரியாது.. வேறெதும் தெரியாது.. ஹோய்..

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு
: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு
: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..

பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

0 மறுமொழிகள்:

Post a Comment