#8 வந்தாள் மகாலக்ஷ்மியே - உயர்ந்த உள்ளம்

படம்: உயர்ந்த உள்ளம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வந்தாள் மகாலக்ஷ்மியே.. என்றும் அவள் ஆட்சியே..
வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ.. தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
ஆஆஆ..
...

பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து.. ஆஹா.. பொங்கலிட்டாள்
பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாக்ஷியோ மீனாக்ஷியோ அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து

வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியேஹே.. ஹஹா..
...

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூவண்ணம்
கண்டேன் சிங்காரக் கைவண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்.. சபாஷ்.. ஆஆஆ..
அ.. ஆ.. அ.. ஆ.. அ.. ஆ..

ஸரிகரிநிஸ கரிநிஸ கரிநிஸ
ஸகக கரிரி ரிநிநி நிதத தபமப
மபநிதமப நிதமப நிதமப
பநிநி நிதத தபப பமம மககரி
ஸாஸ ஸாஸாஸ ஸாஸ ஸாஸாஸ
ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி
ரீரி ரீரிரி ரீரி ரீரிரி
ரிகரிஸ ரிகரிஸ ரிகரிஸ ரிகரிஸ
பபபப மமமம தததத நிநிநிநி
ஸஸஸ நிஸத நிஸநி கரிஸ
நிநிநி தநிப மதநி ஸநித
ஆஹா.. ஆஹா.. ஆஹாஹாஹா..
பபப பபப ததத ததத நிநிநி நிநிநி ஸா
பபப பபப ததத ததத நிநிநி நிநிநி ஸா

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ.. நான் காணவே தேர் வந்ததோ
மங்கலம் பொங்கிடும் மந்திரப் புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய

வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. ஹஹஹா..
அடியேனின் குடி வாழ.. தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலக்ஷ்மியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியேஹே
ஹா.. ஆ.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஆஹ் ஹோ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment