#15 இது ஒரு நிலாக்காலம் - டிக் டிக் டிக்

படம்: டிக் டிக் டிக்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...

பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
யாரும் வந்து நடக்காத சாலை நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ..
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே

இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ..
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
...

0 மறுமொழிகள்:

Post a Comment