#121 ஜானகி தேவி - சம்சாரம் அது மின்சாரம்

படம்: சம்சாரம் அது மின்சாரம்
இசை: சங்கர்-கணேஷ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: சித்ராஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...

சீதை வணங்கி எழுந்தாளே.. கண்களில் அவனை அளந்தாளே
பாதம் பார்த்து நடந்தாளே.. ரகசிய புன்னகை புரிந்தாளே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே
மௌனம்.. மௌனம் சம்மதம்தானே

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
...

ராமன் சீதை முகம் பார்க்க.. சீதையின் கண்களோ நிலம் பார்க்க
நாணம் வந்து தடை போட.. நாயகன் அங்கங்கே எடை போட
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து

ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
ராமன் வந்தான்.. மயங்கிவிட்டாள்
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்
ஜானகி தேவி ராமனைத் தேடி இருவிழி வாசல் திறந்து வைத்தாள்
...

0 மறுமொழிகள்:

Post a Comment