#122 மூங்கில் காட்டோரம் - பூக்கள் விடும் தூது

படம்: பூக்கள் விடும் தூது
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே.. என் காதோடு நீ பாட வா
மலரே.. உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...

அலைகளின் நாட்டியம் கரை மீதுதான்
ஆஹாஹா.. இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட.. இயற்கையும் பாட
இறைவா உன் கற்பனை.. வியக்கும் என் சிந்தனை
பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
...

மேகமென்னும் பெண்ணொருத்தி மோகங்கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி.. கல்யாணம் நடந்ததடி கூடி
மழையோ பெற்ற பிள்ளை.. அதிலே பல கவிதை
ஹே.. மலைகளின் மேலே அருவி விழ..
ஆஹாஹா.. மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க.. நதியதை ரசிக்க
சலங்கை போல் நெல்மணி குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்

மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம் வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
லாலா லாலாலா.. லா லா லா லாலலா..
லாலா லாலா லாலாலாலா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment