#125 நீலக்குயிலே உன்னோடு நான் - மகுடி

படம்: மகுடி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
: கப கரிஸா ரிஸ ஸத ஸா..
பெ: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
: ஸரி கபகரி கபகரி ஸரி ஸா..
பெ: கபதப கபகரி ஸரிகப தா..
: கபதப கபகரி ஸரிகப தா..
பெ: கபதபகப..
: கபதபகப..
பெ: கபதபகப.. ஸா..
: கபதபகப.. ஸா.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
...

பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...

பெ: அதிகாலை நான் பாடும் பூபாளமே.. ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே.. நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
பெ: ஆகாயம்.. பூமி.. ஆனந்தக் காட்சி
: சந்தோஷம் பொங்க சங்கீதம் சாட்சி
பெ: திசைகளில் எழும் புது இசையமுதே.. வா.. வா..

: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
பெ: உள்ளம் பாமாலை பாடுதே
: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
பெ: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
...

பெ: நீர் கொண்டு போகின்ற கார் மேகமே.. தூறல்கள் நீ போட தாகம் தீரும்
: நதி பாயும் அலையோசை ஸ்ருதியாகவே.. நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்
பெ: மலர்க் கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
: பனிவாடைக் காற்று பல்லாண்டு பாடும்
பெ: செவிகளில் எழும் ஸ்வர லய சுகமே.. வா.. வா..

பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
: உள்ளம் பாமாலை பாடுதே
பெ: நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்
: நாதப் புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
பெ: ஆஆஆ ஆ..
...

2 comments: