#123 வானம் நிறம் மாறும் - தாவணிக் கனவுகள்

படம்: தாவணிக் கனவுகள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: ஆ ஆ.. ஆஆஆ ஆஆ..
: ஆ ஆ.. ஆஆ ஆ..
பெ: ஆ ஆ ஆ..
: ஆ ஆ ஆ..
&பெ: ஆஆஆஆ ஆ..
...
: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...

பெ: மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
: அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
பெ: மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
: இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

பெ: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...

பெ: லா லாலலல லா லாலலல லாலலாலலா..
: லா லாலலல லா லாலலல லாலலா..
பெ: லாலலா லா.. லாலலா லா..
: லாலலா லா லா..
...

: பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
பெ: கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும்.. அன்புக் கட்டளை
: சங்கதி ஏராளம்.. என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
பெ: இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

: வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
பெ: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
: நாள்தோறும் வேதங்கள்
பெ: பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும் இள மாலை.. சுபவேளை
: மேகம் பனி தூவும்.. அது காமன் பரிபாஷை
...

0 மறுமொழிகள்:

Post a Comment