#150 என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி

படம்: வள்ளி
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
பெ.குழு: ஆஹாஆ.. ஆஆஆ.. ஆ ஆஆஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆ..
...
பெ&பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்

நான் மெய் மறந்து மாற.. ஓர் வார்த்தையில்லை கூற.. எதுவோ..
பெ: ஓர் மோகம்
பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்

பெ.குழு: ஆஹஹாஹஹாஹா ஆஹஹாஹஹாஹா..
ஆஹஹாஹஹாஹா ஆஹஹாஹஹா..
பெ: கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடியெங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

பெ.குழு: ஆஆஆ.. ஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆ..
பெ: கூடு விட்டுக் கூடு ஜீவன் பாயும்போது
ஒன்றிலொன்றாய்க் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்றுபட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
காலமென்ற தேரே.. ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப் போலே இன்பமெது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமேதான்

பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற.. ஓர் வார்த்தையில்லை கூற.. எதுவோ..
பெ: ஓர் மோகம்
பெ& பெ.குழு: என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே.. பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
...

0 மறுமொழிகள்:

Post a Comment