#234 மானே நானே சரணம் - செந்தூர பாண்டி

படம்: செந்தூர பாண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர் & ஸ்வர்ணலதா: மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

: ஆடை நனைந்திருக்க.. ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி.. காளைக் கன்று வாலை மெல்ல ஆட்டாதா
பெ: தேகம் தழுவியொரு யாகம் செய்யக் கூடாதா
காதோரம் கன்னிப் பூவும் காதல் வேதம் ஓதாதா
: மின்சார மின்னல் ஒன்று மெல்ல மெல்லப் பாய
பெ: மீட்டாத வீணை உந்தன் மார்பின் மீது சாய
: புது ராகம் நரம்புகளில் உருவாகும் நொடிப் பொழுதில்

பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

: பாதக் கொலுசு கொஞ்சும் பாதம் என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம் தித்திக்கின்ற கற்கண்டா
பெ: பூவில் குடியிருக்க நீயும் என்ன பொன்வண்டா
நான்தானே உன்னையெண்ணி சிந்திக்காத நாளுண்டா
: ஆகாயம் பொத்துக் கொண்டு தண்ணீர் விடும்போது
பெ: ஆகாது என்று சொல்லும் தோட்டம் இங்கு ஏது
: ஒரு பாதி குளிர்ந்ததென்ன.. மறு பாதி கொதிப்பதென்ன

பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
பெ: ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்.. இள மனதில் எத்தனை தாகம்
: நீராடு இளமையிலே.. சேவல் கூவும் வரையினிலே
பெ: நானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
: மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
...

0 மறுமொழிகள்:

Post a Comment