# 46 மாலைகள் இடம் மாறுது - டிசம்பர் பூக்கள்

படம்: டிசம்பர் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

பெ
: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..
: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
...

: நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாளாசை
இன்றுதான் கோவிலில் முதல்நாள் பூஜை
பெ: தொட்டுவிட்டுப் போகாமல் தொடரும் காதல்
பட்டுவிழி மூடாமல் தோளோடு மோதல்
: தாகங்கள்.. வரும் மோகங்கள்.. இனி தத்தளிக்கும்
பெ: ம்ம் ம்ம்.. தேகங்கள்.. தரும் வேகங்கள்.. வெள்ளி முத்தெடுக்கும்
: ம்ம் ம்ம்.. தந்த சுகம்.. கண்ட மனம்
சந்தம் படித்திடும்.. சொந்தம் இனித்திடும்

பெ: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
: மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
...

பெ: கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல் கனவில் வாழும்
கைகளில் கங்கையும் கலக்கும் நாளும்
: கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும்
விட்டுவிடக் கூடாமல் விடிகாலை கூடும்
பெ: ஆரங்கள்.. பரிவாரங்கள்.. பல அற்புதங்கள்
: ம்ம் ம்ம்.. எண்ணங்கள்.. பல வண்ணங்கள்.. எழில் சித்திரங்கள்
பெ: ம்ம் ம்ம்.. இன்று முதல்.. இன்னிசைகள்
இங்கு பிறந்திடும்.. எங்கும் பறந்திடும்

: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்கலம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்.. மங்களம்.. மங்களம்..
பெ: மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே
மங்கையின் தோள்களைக் கூடுது கூடுது ஆனந்தமாகவே
...

0 மறுமொழிகள்:

Post a Comment