# 50 காதலில்லை என்று சொன்னால் - பருவ ராகம்

படம்: பருவ ராகம்
இசை: ஹம்சலேகா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதலின்றி யாரும் இங்கில்லை
பெ: வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...

பெ: வானும் மண்ணும் ஆணும் பெண்ணும் வந்தது எதுக்கு
: சேர்ந்திருக்கத்தானே.. தெரிந்து கொள்ளு மானே..
பூவில் வண்டு வந்து வந்து போவது எதுக்கு
பெ: தேனெடுக்கத்தானே.. சேர்ந்திருக்கத்தானே
: ஒரு முறை ஜனனம் பெ: ஒரு முறை மரணம்
: தொடங்கட்டும் பயணம் பெ: தொடரட்டும் தாகம்
: இது நல்ல உருவம் பெ: பயிர் செய்யும் பருவம்
: இனி என்ன தடை வருமா

பெ: வாலிப நெஞ்சங்கள் : கட்டித் தங்கங்கள்
பெ: நாளை என்னாகும் : விட்டுத் தள்ளுங்கள்
&பெ: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
...

: கண்களில்லை என்று சொன்னால் காவியம் இங்கில்லை
பெ: பெண்களில்லையென்றால் ஆண்களிங்கு இல்லை
ஓசையிங்கு இல்லையென்றால் பாஷைகள் இங்கில்லை
: ஆண்களில்லையென்றால் பெண்களிங்கு இல்லை
பெ: சமத்துவம் பெருக : ஜாதிகள் ஒழிக
பெ: இளைஞர்கள் எழுக : பழையது அழிக
பெ: புது யுகம் வருக : பூ மழை பொழிக
பெ: தலைமுறை வளரட்டுமே

: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
: காதலில்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
பெ: காதலின்றி யாரும் இங்கில்லை
: வாலிப உள்ளங்கள் பெ:அட காதலை வெல்லுங்கள்
&பெ: வானவில்லில் ஊஞ்சல் கட்டுங்கள்
: வாலிப நெஞ்சங்கள் பெ: கட்டித் தங்கங்கள்
: நாளை என்னாகும் பெ: விட்டுத் தள்ளுங்கள்
&பெ: வாலிப நெஞ்சங்கள்.. கட்டித் தங்கங்கள்
நாளை என்னாகும்.. விட்டுத் தள்ளுங்கள்
...

0 மறுமொழிகள்:

Post a Comment