#157 ஓம் நமஹா - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

: ம்.. ம் ம்..
ஓம் நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
பெ: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
பெ: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
பெ: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
பெ: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
: நூலாடை விலகி விலகி.. நீரோடை பெருகி வடியும் வேளை
பெ: முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்..
...

பெ: செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
: ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
பெ: மெல்லிய மேனியும் சில்லென ஆனது
: வெட்கமும் சீக்கிரம் விடைபெற்று போனது
பெ: ஏடென்று இடையும் இருக்க.. நூலொன்று இதயம் எழுதாதோ
: இளமையின் இலக்கணம் எடுத்துச் சொல்லிய இளைய கன்னிக்கு
&பெ: ஓம்..

பெ: நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
பெ: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

0 மறுமொழிகள்:

Post a Comment