#151 ராமனின் மோகனம் - நெற்றிக்கண்

படம்: நெற்றிக்கண்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
பெ: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு..
ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
...

பெ: இடமும் வலமும்.. இரண்டு உடலும் மனமும்
: ஓஓஓஓஓ..
பெ: இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
: ஒரு கோவில் மணியின் ராகம்..
பெ: லலல லலல லலல லலலலா..
: ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாளின்றுதான் கண்களே

பெ: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.. ஹோஓ..
: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
...

: இடையும் கொடியும்.. குலுங்கும் நடையும் மொழியும்
பெ: ஹாஆஆஆஆ
: எடை போட கம்பன் இல்லை.. எனக்கந்த திரனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
பெ: மடி மீது கோவில் கொண்டு..
: லலல லலல லலல லலலலா..
பெ: மடி மீது கோவில் கொண்டு
மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்

: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு..
பெ: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
&பெ: லாலலா லாலலா.. லாலலா லாலலா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment