#224 ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அடியே ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
...

ஆவாரம் பூவாக அள்ளாமக் கிள்ளாம அணைக்கத் துடிச்சிருக்கேன்
அச்சாரம் போட்டாச்சு.. அஞ்சாறு நாளாச்சு.. தனிச்சுத் தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேணாமா
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா
மாருல குளுருது.. சேர்த்தென்ன அணைச்சாத் தீருமடி குளிரும்
கட்டிப் புடிச்சுக்க

ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
...

நான் போறேன் முன்னாலே.. நீ வாடி பின்னாலே நாய்க்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே.. என்னாடி அம்மாளே.. வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
பவள வாயில தெரியிற அழகைப் பார்த்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது

ஏய்.. ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
அட அக்கம் பக்கம் யாருமில்லே
அள்ளிக்கலாம்.. வா புள்ளே..
ஏ ஆத்தா.. ஆத்தோரமா வார்றியா
நான் பார்த்தா பார்க்காமலே போறியா
...

0 மறுமொழிகள்:

Post a Comment