#227 அந்தரங்கம் யாவுமே - ஆயிரம் நிலவே வா

படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா

எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்ஆ1: ம்ஹும்..
ஆ2: எப்டி எப்டி
ஆ1: ம்ஹும்..
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: ம்ஹும்.. ம்ஹுஹுஹுஹுஹுஹும்
...
ஆ1: அந்தரங்கம் யாவுமே
ஆ2: எப்டி எப்டி
ஆ1: சொல்வதென்றால் பாவமே
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும் ihikhikஅறியுமா
அந்தரங்கம் யாவுமே.. ஏ.. ஏ..
...

ஆ1: காமனே நாணம் கொண்டான்.. சொல்லி அது தீராது
ஆ2: எப்டி எப்டி
ஆ1: கம்பனே வந்தால் கூடக் கட்டுப்படி ஆகாது
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: கண்டதில் இன்று நான் சொல்வது பாதியே
காவிய நாயகி கண்ணகி ஜாதியே
அன்று ஒரு நாள் அந்த மயிலாள் ஆடை நனைந்தாள்
ஆ2: ஹாஹா..
ஆ1: காயும் வரையில் தோகை உடலில் என்னை அணிந்தாள்
நாணமே சேலையானதும் போதையானதும் என்னென்று சொல்ல

ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும் ihikhikஅறியுமா
அந்தரங்கம் யாவுமே..
ஆ2: ஹா.. எப்டி.. எப்டி எப்டி எப்டி எப்டி..
...

ஆ1: காதலை தானம் கேட்டேன் என்னவொரு தாராளம்
ஆ2: எப்டி எப்டி
ஆ1: நானவள் தோளில் சாய்ந்து அள்ளியது ஏராளம்
ஆ2: எப்டி எப்டி
ஆ1: தாவணிப் பூவினைச் சோதனை செய்கிறேன்
எத்தனை மச்சங்கள்.. கேள் அதைச் சொல்கிறேன்
பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிவேன்
ஆ2: ஆஹா..
ஆ1: ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிவேன்
மீதியை நான் உரைப்பதும் நீ ரசிப்பதும் பண்பாடு இல்லை

ஆ1: அந்தரங்கம் யாவுமே
ஆ2: எப்டி எப்டி
ஆ1: சொல்வதென்றால் பாவமே
ஆ2: ihikhikஎப்டி எப்டி
ஆ1: அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
ஏழையின் காதலை மாளிகை அறியுமா
காதலின் வாசனை.. ம்ஹுஹும்ihikhik அறியுமா
...

2 comments:

  1. எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. எனக்கும் பிடித்த பாடல், இரண்டு கதாபாத்திரங்களின் குரல்களுக்காக எஸ்.பி.பி. அவர்கள் காட்டும் ஒரு சின்ன வித்தியாசம் அருமை. வருகைக்கு மிக்க நன்றி. :)

    ReplyDelete