#221 வைகறையில் வைகைக் கரையில் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...

உன் நினைவே எனக்கோர் சுருதி.. உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி.. வாடுதம்மா மலர் போல் கருகி
பலப்பல ஜென்மம் நானெடுப்பேன்.. பாடல்கள் நூறு நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
...

ஆயிரமாயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளைக் கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்
நினைவுகள் எங்கோ அலைகிறதே.. கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..

வைகறையில் வைகைக் கரையில் வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக் கரையில் வந்தால்:( வருவேன்:( உன்னருகில்
...

0 மறுமொழிகள்:

Post a Comment