#26 ஹே.. ஐ லவ் யூ - உன்னை நான் சந்தித்தேன்

படம்: உன்னை நான் சந்தித்தேன்
இசை: இளையராஜா

பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்

பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...

பெ: பசும்புல் பாய்கள் விரிக்கும்.. பனியில் பூக்கள் குளிக்கும்
இதயமே மதுவிலே நனையுதே
: இதுதான் மாலை விருந்து.. மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே
பெ: காதோரம் மெல்ல கூறும் சேதி தேன் போலே பாயாதோ
: நீராடும் வண்ணப் பூவும் நாளை பூ மஞ்சம் போடாதோ
&பெ: லா.. லலலா.. லலலா.. லா..

: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
பெ: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
...

: துகிலோ மெல்ல விலகும்.. கரமோ தொட்டுப் பழகும்
சுகத்திலே கனவுகள் வளருதே
பெ: முகிலோ வானில் மிதக்கும்.. மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையும் காதலால் மயங்குதே
: தேனூறும் கன்னிப் பூவைச் சூடும் பூங்காத்தும் நான்தானே
பெ: போராடும் பள்ளிக்கூடம் தேடும் பூச்செண்டு நான்தானே
&பெ: லா.. லலலா.. லலலா.. லா..

பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
: அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை எழுது.. மெல்ல எழுது
&பெ: ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
ஹே.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ
...

0 மறுமொழிகள்:

Post a Comment