#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு

படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா

: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...

பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு

பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா

: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

0 மறுமொழிகள்:

Post a Comment