# 88 நாணமோ.. இன்னும் நாணமோ - ஆயிரத்தில் ஒருவன்

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடியவர்க்ள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
...

: தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது.. வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது..
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
...
பெ: ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது இது..

பெ: நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...


பெ: மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலே மலர்ச் செண்டாவது
காலையில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது..
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
...
: உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் மாறுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது இது..

: நாணமோ.. இன்னும் நாணமோ..
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ.. நாணமோ..
பெ: ஓ.. ஓஓஓ.. நாணுமோ.. இன்னும் நாணுமோ..
தன்னை நாடும் காதலன் முன்னே
திருநாளைத் தேடிடும் பெண்மை
நாணுமோ.. நாணுமோ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment