# 98 சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.சுசீலா

லாலா லாலா லாலா.. லாலலலா..
லாலல லாலல லாலலலா..
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே.. பொன் விளக்கே
ஆரிரரோ.. ஆரிரரோ..
சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
...

தோள் தொட்டு மாலையிட்டு சூல் கொண்ட பெண்ணில்லை
அன்னையானேன் கன்னி நானே
வேறென்ன பிள்ளைச் செல்வம்.. நீ மட்டும் போதாதோ
இந்த வாழ்க்கை.. இன்ப வாழ்க்கை
நீதான் எங்கே.. கண்ணே.. நான்தான் அங்கே
நாளும் ஒரு தரம்.. தரிசனம்
வழங்கிடும் திருமுகம்.. எனக்கொரு தரிசனம்

சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
...

நூறாண்டு காலம் வாழ.. உன்னோடு நான் வாழ
தெய்வம் நம்மைச் சேர்க்க வேண்டும்
ஆனந்த கங்கை போல.. காவிரி நீர் போல
உந்தன் வாழ்க்கை பொங்க வேண்டும்
பூவே.. பூவே.. தென்றல் காற்றே.. காற்றே
நீதான் பசுங்கிளி.. பைங்கொடி
மழலைகள் பொழிந்திட இனித்திடும் மணிமொழி

சின்னஞ்சிறு கண்ணு ரெண்டும் செங்கமலப் பூவா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
அம்மாடி நீ ஆடி வரும் அங்காளம்மன் தேரா
நீ சிரிச்சா நான் சிரிப்பேன்
பூந்தளிரே.. பொன் விளக்கே
ஆரிரரோ.. ஆரிரரோ.. ஆரிரரோ.. ஆரிரரோ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment