# 90 வான் நிலா நிலா அல்ல - பட்டினப் பிரவேசம்

படம்: பட்டினப் பிரவேசம்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் & ராமமூர்த்தி
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
லா.. லலா.. லலா.. லலா.. லலாலலாலலா..
...
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
தெய்வம் கல்லிலா.. ஒரு தோகையின் சொல்லிலா
பொன்னிலா.. பொட்டிலா.. புன்னகை மொட்டிலா
அவள் காட்டும் அன்பிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா
தீதிலா காதலா.. ஊடலா.. கூடலா
அவள் மீட்டும் பண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா.. ஹா..
வாழ்க்கை வழியிலா.. ஒரு மங்கையின் ஒளியிலா
ஊரிலா.. நாட்டிலா.. ஆனந்தம் வீட்டிலா
அவள் நெஞ்சின் ஏட்டிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா.. ஒரு பூவையின் அருளிலா
எண்ணிலா ஆசைகள் என் நிலா கொண்டதேன்
அதைச் சொல்வாய் வெண்ணிலா

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா.. என் தேவி இன்னிலா
நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா
...

2 comments:

  1. நான் மிக விரும்பி கேட்கும் நிலா பாட்டு....நன்றி...ஒருதடவ கேட்டாச்சு ஒருதடவ பாடியும் பார்த்தாச்சு...நன்றி தோழி... தொடர்ந்து பதிவிடவும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கனி. :)

    ReplyDelete