#138 பூந்தென்றல் காற்றே வா வா - மஞ்சள் நிலா

படம்: மஞ்சள் நிலா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயச்சந்திரன் & பி.சுசீலா

பெ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...

பெ: ஏங்காமல் ஏங்கும் இளமைக் காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக் கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
: பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே..

: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...

: காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண் மூடும் நேரம் கவிதை பாடும்
கை சேரும்போதும் இதயம் கூடும்
பெ: ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ..

பெ: பூந்தென்றல் காற்றே வா வா..
: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
பெ: ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்.. ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்..
: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெ: ஆனந்த தாகம்தானின்று தீர
பூந்தென்றல் காற்றே வா வா..
: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment