#214 கவிதை பாடு குயிலே குயிலே - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பா.. ரபப்பா.. ஹே.. ரபப்பா.. ரபப்பா.. ரபப்பா.. ரபப்பா..
...
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே.. விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
...

நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களே
வான வெளியில் வலம் வரும் பறவை
நானும் அது போல்.. எனக்கென்ன கவலை
காற்று என் பக்கம் வீசும்போது.. காலம் என் பேரைப் பேசும்போது
வாழ்வு எனது வாசல் வருது.. நேரம் இனிதாக.. யாவும் சுகமாக

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே.. விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
...

கோயில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம்
கூட எனது நிழலென வருமோ
நாளும் இனிய நினைவுகள் தருமோ
பாவை கண் கொண்ட பாசம் என்ன.. பார்வை சொல்கின்ற பாடமென்ன
நீல மலராய் நேரில் மலர.. நாளும் தடுமாற.. நெஞ்சம் இடம் மாற

கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே..
விழிகள் யாவிலும்.. ம்ஹும் ம்ஹும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒரு நாள் இதுதானே
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ரபப்பப்பா.. பபபப்பப்பா.. பபப்பா பப பபப்பப்பா..
ரபப்பப்பா.. பா பா பா பா பபப பபப்பப்பா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment