#257 தென்றல் வந்து தீண்டும்போது - அவதாரம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அவதாரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி & குழுவினர்

 

பெ.குழு: தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத்தானானா
தானத்தந்தம் தானத்தந்தம்.. தானத் தானத் தானத் தானானா
தம்தம் தந்தனதந்தம் தம்தம்.. தம்த தம்தம் தந்தனதந்தம் தம்தம்..
: தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தந்த தன தான தான தான தானனா.. தனனனா..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா.. உள்ளத நானுஞ்சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே..
தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

பெ.குழு: தும்தும்தும்தும்.. தும்தும்தும்தும்..
ஓ ஓஓஓஓஓ.. ஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓ..
ஓ ஓ.. ஓஓ.. ஓ ஓ.. ஓஓ.. ஓஓஓஓ ஓ ஓ
ஓ ஓஓ ஓஓஓ ஓ..
ஆஆஆ ஆஆஆஆ ஆ..
...
பெ: எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
ஒ(உ)றவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
பெ: ஓடை.. நீரோடை.. இந்த ஒ(உ)லகம் அது போல
: ஓடும்.. அது ஓடும்.. இந்தக் காலம் அது போல
பெ: நெ(நி)லையா நில்லாது நினைவில் வரும் நெ(நி)றங்களே

: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
...

பெ.குழு: ம்ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்..
ம்ம்.. ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்
ம்.. ம்.. ம்ம்..
...
: ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாந்(ம்) துளிர்க்குது
நேசம் பொ(பி)றந்தாலே ஒ(உ)டம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
பெ: ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலைபோலே அழகெல்லாம் கோலம் போடுது
: குயிலே குயிலினமே.. அன்பை எ(இ)சையாக் கூவுதம்மா
பெ: கிளியே கிளியினமே.. அதைக் கதையாய்ப் பேசுதம்மா
: கதையாய்.. விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

பெ: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
பெ: வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா
: எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ: உண்மையிலே உள்ளது எண்ணம் என்ன
வண்ணங்கள் என்ன என்ன
: தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ.. மனசுல
பெ: திங்கள் வந்து காயும்போது என்ன வண்ணமோ.. நெ(நி)னப்புல
...

0 மறுமொழிகள்:

Post a Comment