#260 தேனே தென்பாண்டி மீனே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
...
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
நீதான் செந்தாமரை.. ஆரிராரோ..
நெற்றி மூன்றாம் பிறை.. தாலேலேலோ..
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
...

மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு.. நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு.. மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
...

பால் கொடுத்த நெஞ்சிலே ஈரமின்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம்பூவைத் தூரம் வைத்தால் வாசம் விட்டுப் போகுமா
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை

தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
நீதான் செந்தாமரை.. ஆரிராரோ..
நெற்றி மூன்றாம் பிறை.. தாலேலேலோ..
தேனே தென்பாண்டி மீனே.. இசைத்தேனே.. இசைத்தேனே
மானே.. இள மானே..
...

0 மறுமொழிகள்:

Post a Comment