#264 ஆடும் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.சுசீலா & குழுவினர்

பெ: ஆடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
பாடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
போகிற இளமை மீண்டும் வருமா.. ஆடிடு.. பாடிடு இளமையில்
தேடிடும் தனிமை திரும்ப வருமா.. கூடிடு.. பாடிடு தனிமையில்
பெ.குழு: பூவல்ல.. தேனல்ல.. நானின்று நானல்ல
பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

பெ&பெ.குழு: மேலோகம் பூலோகம் மாறும்.. மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்.. நாள்தோறும் மோகங்கள்தான்
ஆடும்போது தேகம் தேயும்.. பார்க்கும்போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ.. வா இங்கே இங்கே..

பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

பெ&பெ.குழு: நானென்று நீயென்று ஏது.. பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது.. போதைக்கு எல்லை இல்லை
காலை ஏது.. மாலை ஏது.. காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டுப் போகாது.. வா இங்கே இங்கே..

பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
போகிற இளமை மீண்டும் வருமா.. ஆடிடு.. பாடிடு இளமையில்
தேடிடும் தனிமை திரும்ப வருமா.. கூடிடு.. பாடிடு தனிமையில்
பெ.குழு: பூவல்ல.. தேனல்ல.. நானின்று நானல்ல
பெ: ஆடும் நேரம்..
பெ&பெ.குழு: இதுதான் இதுதான்.. வா வா வா வா..
பாடும் நேரம் இதுதான் இதுதான்.. வா வா வா வா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment