#263 பாடு நிலாவே - உதய கீதம்

படம்: உதய கீதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: ஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ.. ஆ.. ஆஆஆஆ..
...
பெ: பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
உன் பாடலை நான் தேடினேன்.. கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே.. தேன் கவிதை.. பூ மலர..
...

பெ: நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதானபோதும் கைசேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
உன் பாடலை நான் கேட்கிறேன்.. பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
...

: ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் இந்நேரங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கைசேரத் துள்ளும்
ராகங்கள் சேரும்.. தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

: பாடும் நிலாவே.. தேன் கவிதை.. பூ மலரே..
பெ: உன் பாடலை நான் கேட்கிறேன்
: பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெ: பாடும் நிலாவே
: தேன் கவிதை
பெ: பூ மலரே..
...

0 மறுமொழிகள்:

Post a Comment