# 59 என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ஹேய்.. ஹேய்..
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
உங்க சந்நிதி வாசலிலே வந்து நித்தமும் பார்த்திருக்கேன்
நீங்க இட்டது சட்டமென ஏவல் செஞ்சிடக் காத்திருக்கேன்
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
...

பொன்மேனி உன் மேனிதான் போராடக் கூடாதய்யா
உன் மேனி திண்டாடினா என் மேனி தாங்காதய்யா
ராஜாதி ராஜாவுக்கு ராஜாத்தி நானில்லையா
சொந்தங்கள் போனாலுமே பந்தங்கள் போகாதய்யா
நேத்து வந்த கோபமும் தாபமும் போனாப் போகுது.. விட்டுத் தள்ளு
சேர்த்து வச்ச பாசமும் நேசமும் வீணாப் போகுது.. அள்ளிக் கொள்ளு
ஆசைப்பட்டதும் அவதிப்பட்டதும் மறந்து போயிடுச்சா
அப்போ ஆளைத் தொட்டதும்.. தோளைத் தொட்டதும் கசந்து போயிடுச்சா
பட்டதும் தொட்டதும் சட்டுன்னு விட்டுடுமா.. ஹே.. ஹே.. ஹேய்..

என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
உங்க சந்நிதி வாசலிலே வந்து நித்தமும் பார்த்திருக்கேன்
நீங்க இட்டது சட்டமென ஏவல் செஞ்சிடக் காத்திருக்கேன்
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
ஹேய்.. எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
...

கண்ணா.. என் கைராசிதான்.. கல்லெல்லாம் பொன்னாகுமே
கண்ணாலே கண்டாலுந்தான் முள்ளெல்லாம் பூவாகுமே
பெண்ணுள்ளம் எந்நாளுமே பேசாமே போகாதய்யா
உன்னாட்டம் தள்ளிச் செல்ல என்னாலே ஆகாதய்யா
காதலிச்ச மோகமும் தாகமும் நெஞ்சில் பொங்குற வேளையிலே
கையணைச்ச காலமும் நேரமும் மீண்டும் கூடுற நாளையிலே
முறைச்ச முறைப்பும் விரைச்ச விரைப்பும் இன்னமும் மாறலியா
அப்போ கொதிச்ச கொதிப்பு.. துடிச்ச துடிப்பு இன்னமும் ஆறலியா
கொஞ்சுனா மிஞ்சுறே.. மிஞ்சுனா கெஞ்சுறியே.. ஹே.. ஹே.. ஹேய்..

என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
உங்க சந்நிதி வாசலிலே வந்து நித்தமும் பார்த்திருக்கேன்
நீங்க இட்டது சட்டமென ஏவல் செஞ்சிடக் காத்திருக்கேன்
என்னாங்க மாப்பிள்ளே நலந்தானா
எல்லாரும் வீட்டுலே சுகந்தானா
...

0 மறுமொழிகள்:

Post a Comment