# 76 சங்கத் தமிழ்க் கவியே - மனதில் உறுதி வேண்டும்

படம்: மனதில் உறுதி வேண்டும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
பெ: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
: சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
...

பெ: மாதுளம்பூவிருக்க.. அதற்குள் வாசனைத் தேனிருக்க
: பாதியை நானெடுக்க.. மெதுவாய் மீதியை நீ கொடுக்க
பெ: காதலன் கண்ணுறங்க.. தலைவி கூந்தலில் பாய் விரிக்க
: ஒரு புறம் நானணைக்க..
ஆஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஒரு புறம் நானணைக்க.. தழுவி மறு புறம் நீயணைக்க
பெ: சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ்க் கவியே.. சங்கத்தமிழ்க் கவியே
...

பெ: பூங்குயில் பேடைதனை சேரத்தான் ஆண்குயில் பாடியதோ
: ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான் ஓடையும் வாடியதோ
பெ: காதலன் கைதொடத்தான்.. காதலன் கைதொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ
: நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே பார்வையை ஓட விட்டேன்
பெ: தோழியர் யாவரும் கேலிகள் பேச தினம்தினம் நான் தவித்தேன்

: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
பெ: சங்கத்தமிழ்க் கவியே சந்தங்கள் சொல்லும் இசைக் குயிலே
தன்னந்தனியாகத் தவித்தால் தாகமடங்கிடுமோ
: சங்கத்தமிழ்க் கவியே.. ஏஏஏ..ஏ..ஏ..
...

0 மறுமொழிகள்:

Post a Comment