# 68 அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக் - ரேவதி

படம்: ரேவதி
இசை: சங்கர்-கணேஷ் (?!)
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணே.. கண்ணே.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணா.. கண்ணா.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
...

பெ: கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம் அல்ல
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல
கவி பாட வார்த்தைக்குப் பஞ்சம் அல்ல
சொல்லத்தான் நினைக்கும்.. நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்.. எதையோ மறைக்கும்
: வாடாத பூவுக்கு வாசம் இல்லை
வாடாத பூவுக்கு வாசம் இல்லை
கலந்தேன் இவளை.. மறந்தேன் கவலை

பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
ஹா.. அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
: காதல் சொல்ல வாய் கூசுது.. கண்ணே.. கண்ணே.. கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
...

: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
பெ: ம்..
: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
பெ: ம்ஹும்..
: நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை
பெ: ம்..
: நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை
நிலவாய் எழுவாய்.. மடிமேல் விழுவாய்
ஒரு வாய் அமுதம்.. தருவாய் மெதுவாய்
பெ: தாளாத பெண்மைக்குத் தாழ்ப்பாளில்லை
தாளாத பெண்மைக்குத் தாழ்ப்பாளில்லை
மெதுவாய் திறக்கும்.. அதுவாய் கொடுக்கும்

: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
பெ: ihikhik அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
: காதல் சொல்ல வாய் கூசுது
பெ: கண்ணா.. கண்ணா.. கண் பேசுது
: தேகம் அடிக்கடி துடிக்குது
பெ: அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
: அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
...

0 மறுமொழிகள்:

Post a Comment