# 70 சொர்க்கத்தின் வாசற்படி - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

படம்: உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சின்ன மலர்க் கொடியே.. நெஞ்சில் சிந்தும் பனித்துளியே
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
...

: உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
பெ: ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
: சிற்றன்னவாசலின் ஓவியமே.. சிந்தைக்குள் ஊறிய காவியமே
பெ: எங்கே நீ.. அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்
: மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு.. வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
...

பெ: உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
: கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்
பெ: மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்.. மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்
: கண்ணே.. உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால்.. மெய் தொட்டால் மீட்டிடுமோ
பெ: கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன்.. நீயென்னை ஆளுகிறாய்

: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
: பெண்ணல்ல நீயெனக்கு.. வண்ணக் களஞ்சியமே
பெ: சிந்தும் பனித்துளியே.. என்னைச் சேரும் இளங்கிளியே
: சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
பெ: சொர்க்கத்தின் வாசற்படி
...

0 மறுமொழிகள்:

Post a Comment